சுடச்சுட

  

  வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
  நீட் தேர்வில் கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சபேஷ் 720க்கு 415 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.  இம் மாணவர் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுடன், ஓராண்டாக நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று, முதல் முயற்சியிலேயே  அதிக மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  சாதனை படைத்த மாணவரை,  பள்ளியின் கௌரவ ஆலோசகர் ராஜன்,  தலைவர் ராஜா, துணைத் தலைவர் நல்லையன்,  செயலாளர் சிங்காரவேலு,  இயக்குநர்கள் ராஜராஜன்,  ராஜேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் குமாரசாமி, முதல்வர் சாரதா,  ஸ்பார்டன் அகாதெமி ஒருங்கிணைப்பாளர் பனிதர்,  ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai