திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நூலகம்
By DIN | Published on : 13th June 2019 10:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் காத்திருக்கும் நேரங்களில் படிப்பதற்காக நூலகம் அமைக்க நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நூல்கம் ஏற்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் பார்வைக்கு தெரியும்படியாக அலமாரிகள் வைத்து புத்தகங்களை அடுக்கி வைக்கப்பட்டன. புத்தக அலமாரியில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, நீதிக் கதைதகள், பொது அறிவு, தன்னம்பிக்கை புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள்களாக காவல் நிலையங்களுக்கு வரும் மனுதாரர்கள், புகார்தாரர்கள் காவல் அதிகாரிகளுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் புத்தகங்களை வாசித்து வருகின்றனர்.