சுடச்சுட

  

  தொழில் நுட்பம்,  புதுமை இருந்தால் எந்தத் தொழிலிலும் சாதிக்கலாம்

  By DIN  |   Published on : 13th June 2019 10:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் டிரினிடி அகாதெமி மெட்ரிக் பள்ளி ஆகியவை சார்பில் வணிகவியல் துறை சார்பில் "வணிகவியல் துறையில் நாமும் சாதிக்கலாம் என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கு டிரினிடி கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது,
   இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தார்.  டிரினிடி அகாதெமி மெட்ரிக் பள்ளி செயலர் டி.சந்திரசேகரன், இயக்குநர் பி.தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக சென்னை தாம்பரம் சுவாமி விவேகானந்தா பொதுத் திட்ட அமைப்பின் நிறுவனர் மற்றும் அதன் இயக்குநர் எம்.சத்யகுமார் பங்கேற்றுப் பேசியது;  உலகின் வளர்ச்சி அடைந்த நாடான அமெரிக்காவில் ஆயிரம் பொறியியல் கல்லூரிகள் அமைந்துள்ளன.   ஆனால் தமிழகத்தில் மட்டும் 540-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 
  அதே போல், தமிழகத்தில் ஏறத்தாழ 2 ஆயிரம் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.   ஒவ்வோர்  ஆண்டும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவாகின்றனர்.   இருப்பினும், மதிப்பெண் அதிகம் பெற்றவர்களைவிட சுமாரான மதிப்பெண் எடுத்தவர்கள் பலர், தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சாதனை படைக்கின்றனர்.  நாம் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே நமக்கு நம் வாழ்வில் ஏற்றத்தைத் தராது.  33 மாவட்டங்களில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்கள் என்றால் 18 எண்ணிக்கையிலேயே உள்ளன.  இதில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று. வணிகவியல் துறை மாணவர்களுக்கு வணிகம், கல்வி,  ஊடகம், தகவல் தொடர்பியல், பொழுதுபோக்கு, போக்குவரத்து, வங்கி, காப்பீடு, அரசுப் பணி போன்றவற்றில் ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும்,  பட்டய கணக்காளர் படிப்பான சி.ஏ.  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  குறிப்பாக,  மத்திய அமைச்சர்களான பியூஸ் கோயல்,  சுரேஷ் பிரபு, அரசியல் விமர்சகர் குருமூர்த்தி,  வங்கியியல் நிபுணர் தீபக் பரே போன்ற புகழ்பெற்றவர்கள் சி.ஏ. படித்தவர்கள் தான்.   எந்த தொழிலில் வேண்டுமானாலும் நாம் பிரகாசிக்கலாம்.   ஆனால் புதிய சிந்தனை,  தொழில் நுட்பம் இவற்றோடு புதுமையும் இருந்தால் மட்டுமே இந்த சமூகமானது நீங்கள் விரும்பும் அனைத்தையும் தரும் என்றார்.
  டிரினிடி அகாதெமி தலைவர் ஆர்.குழந்தைவேல் மற்றும் டிரினிடி கல்லூரிச் செயலர் கே.நல்லுசாமி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துப் பேசினர். இந்த நிகழ்வில் டிரினிடி அகாதெமி சி.பி.எஸ்.இ. பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் டி.சித்தார்த்,  மின்சார வாரிய முன்னாள் பொறியாளர் ஆர்.அன்பழகன்,  டிரினிடி மெட்ரிக் பள்ளி முதல்வர் எஸ்.சோமசுந்தரம்,  டிரினிடி கல்லூரி முதல்வர் எம்.ஆர்.லட்சுமிநாராயணன், கல்லூரி கல்வி இயக்குநர் அரசு பரமேஸ்வரன், நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார், வேலைவாய்ப்பு இயக்குநர் கே.மனோகரன் உள்பட 600-க்கும் மேற்பட்ட  மாணவியர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai