மேல்நிலைத் தொட்டி குடிநீர் விநியோக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 14th June 2019 11:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்செங்கோடு, ஜூன் 13: திருச்செங்கோடு அண்ணாசிலை முன் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைத்தொட்டி குடிநீர் விநியோக பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சுப்பிரமணி தலைமை வகித்தார். ரவி வரவேற்றார். மாநிலத் தலைவர் சண்முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். குறைந்தபட்ச ஊதியச் சட்டம் குறித்த அரசாணைகள் வந்தது முதல் சம்பளம் நிர்ணயம் செய்து நிலுவை ஊதியங்களை வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களைப் போல துப்புரவுப் பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.