சி.ஐ.டி.யு. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 11:00 AM | Last Updated : 14th June 2019 11:00 AM | அ+அ அ- |

நாமக்கல், ஜூன் 13: நாமக்கல் பூங்கா சாலையில், சி.ஐ.டி.யு. சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை பிற்பகலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.சிங்காரம் தலைமை வகித்தார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைத்தால் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு இப் பிரச்னையில் தலையிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் என்.வேலுசாமி, மாவட்ட பொருளாளர் ஏ.கே.சந்திரசேகரன்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.