சேலத்தில் ரூ. 2.97 கோடியில் கட்டப்பட்ட ஆயுதப்படை நிர்வாக கட்டடம் திறப்பு
By DIN | Published On : 14th June 2019 11:02 AM | Last Updated : 14th June 2019 11:02 AM | அ+அ அ- |

சேலம், ஜூன் 13: சேலத்தில் ரூ. 2.97 கோடியில் கட்டப்பட்ட ஆயுதப்படை நிர்வாக கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
சேலம் மாநகர ஆயுதப்படை பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து அன்னதானப்பட்டியில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தின் பின்பகுதியில் ரூ.2.97 கோடி மதிப்பில் ஆயுதப்படை நிர்வாக கட்டடம் புதியதாகக்
கட்டப்பட்டது.
இங்கு ஆயுதப்படை காவலர்கள் ஓய்வெடுப்பதற்கு விசாலமான அறை, துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் வைக்க அறை, ஆயுதங்களை சரிபார்க்கும் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
அதேபோல மாநகர மற்றும் மாவட்டத்தில் உள்ள போலீஸாருக்கான மருத்துவமனையும் தற்போது புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலமாக இந்த புதிய கட்டடத்தை வியாழக்கிழமை திறந்து வைத்தார்.