கூட்டுறவு சங்கத்தில் ரூ .7 லட்சத்துக்கு எள் விற்பனை
By DIN | Published On : 19th June 2019 07:25 AM | Last Updated : 19th June 2019 07:25 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர எள் விற்பனை ரகசிய டெண்டர் முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.7 லட்சத்துக்கு எள் விற்பனையானது.
100 மூட்டைகளில் எள்விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது. இவற்றை வாங்க 30 வியாபாரிகள் வந்தனர். ரகசிய டெண்டர் முறையில் ரூ 7 லட்சத்துக்கு விற்பனையானது. கருப்பு எள் ரகம் கிலோ ரூ. 104.90 முதல் ரூ. 116.90 வரையும், வெள்ளை ரகம் ரூ.102 முதல் ரூ.111.60 வரையும், சிவப்பு ரக எள் ரூ. 104.20 முதல் ரூ. 112.20 வரையும் விலை போனது. இதுதவிர, பருத்தி 100 மூட்டை ரூ. 2லட்சத்துக்கு விலை போனது. பிடி ரகம் குவிண்டால் ரூ. 5,082 முதல் ரூ.5,332 வரை விற்பனையானது.