நாவலடியான் கோயில் தல வரலாறு குறுந்தகடு வெளியீடு

மோகனூர் நாவலடி கருப்பண்ண சுவாமி கோயில் தல வரலாறு குறுந்தகடு வெளியிடப்பட்டது.,

மோகனூர் நாவலடி கருப்பண்ண சுவாமி கோயில் தல வரலாறு குறுந்தகடு வெளியிடப்பட்டது.,
மோகனூர் நாவலடி கருப்பண்ண சுவாமி மற்றும் காளியம்மன் கோவில் தல வரலாறு  குறுந்தகடு வெளியீட்டு விழா  கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பரம்பரை அறங்காவலர் இரா.சரவணன் தலைமை வகித்தார்.  பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் பி.சிங்கையன், பரம்பரை அறங்காவலர் எஸ்.பி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பரம்பரை அறங்காவலர் வேலு.ராசாமணி வரவேற்றார், 
இதையடுத்து, தல வரலாறு குறுந்தகட்டை   ஓய்வு பெற்ற  காவல் துறை அதிகாரி அ.பாரி வெளியிட, கரூர் முன்னாள் எம்எல்ஏ வடிவேலு பெற்றுகொண்டார். நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் கிருஷ்ணராஜா,  பரம்பரை அறங்காவலர்கள் கே. சுப்பிரமணியம், எஸ். சதாசிவம், கே.ராஜலிங்கம், வீ.வசந்தகுமார், பி.நல்லுசாமி, என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.சக்திவேல், வி. நவலடி  உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதைத் தொடர்ந்து, இல்லறம் சிறக்க இருவரில் யார் பங்கு உயர்ந்தது மதுரையே, சிதம்பரமே, என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. விழா முடிவில் பரம்பரை அறங்காவலர், சி.பி. நவலடி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com