28-இல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
By DIN | Published On : 23rd June 2019 03:28 AM | Last Updated : 23rd June 2019 03:28 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம். இதில், விவசாயம் தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்வதுடன், நில பிரச்னைகள், பால் தொடர்பான பிரச்னைகள் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.