மனைவியை மீட்டு தரக் கோரி கணவர், குழந்தைகள் மனு
By DIN | Published On : 25th June 2019 09:39 AM | Last Updated : 25th June 2019 09:39 AM | அ+அ அ- |

ஒன்பது மாதங்களுக்கு முன் மாயமான தனது மனைவியை மீட்டு தரக்கோரி, அவரது கணவர் மற்றும் குழந்தைகள் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, நாமக்கல் மாவட்டம் பொத்தனூரைச் சேர்ந்த தியாகராஜன் அளித்த மனு: விவசாயத் தொழில் செய்து வரும் எனக்கு மனைவி முத்துலட்சுமி, ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளன. கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் எங்களை விட்டு பிரிந்து சென்ற என் மனைவி வீடு திரும்பவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்படுகிறேன். குழந்தைகளின் ஆவணங்கள் அனைத்தையும் அவர் எடுத்துச் சென்று விட்டார். குழந்தைகள் தாயை பிரிந்து மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே, எங்களை விட்டு பிரிந்து சென்ற என் மனைவியை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.