சுடச்சுட

  

  குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 26th June 2019 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி,  நாமக்கல்லில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கக் கோரி,  நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் பேசியது:-
  வறட்சியால் தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் அதிமுக அரசு மெத்தனம் காட்டி வருகிறது. ரூ.500 கோடி நிதி ஒதுக்கினால் மட்டும் போதுமா?  திடீரென மழை பெய்தால் அந்த நிதி மாயமாகி விடும். 
  விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது குடிநீர் தடையின்றி மக்களுக்கு கிடைக்கும். மத்திய அரசிடம் வலியுறுத்தி, தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றி கொடுக்கப்படும். 
  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல், சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறும். மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது. இதை தடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது என்றார்.
  ஆர்ப்பாட்டத்தில் நகரப் பொறுப்பாளர் ராணா.ஆர்.ஆனந்த், மாவட்ட அவைத் தலைவர் இரா. உடையார், துணைச் செயலர்கள் பி.இராமலிங்கம்,  எஸ். விமலா சிவகுமார், மாநில நிர்வாகிகள் ப.இராணி, இரா.நக்கீரன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.பொன்னுசாமி, கே.பி.இராமசாமி, ப.சரசுவதி,  பொருளாளர் கே. செல்வம், தலைமை செயற்குழு ஏ.கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் டாக்டர் மாயவன், ஆர்.சுப்ரமணியம், க.அழகரசு, எஸ்.வனிதா செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  திருச்செங்கோட்டில்...
  குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி,  திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே திமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஆர்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலர்.கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்து,  பேசியது:-
  தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் குடிநீர் இல்லாமல் மக்கள் குடங்களை எடுத்துகொண்டு அலைந்து வருகின்றனர். 
  குடிநீர் பிரச்னையைத் தீர்க்க,  நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.  அனைத்து வார்டுகளிலும் குடிநீர் முறையாக விநியோகிக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai