சுடச்சுட

  

  தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் முத்தாயம்மாள் கலை கல்லூரி மாணவி சிறப்பிடம்

  By DIN  |   Published on : 26th June 2019 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சாதனை புரிந்து சர்வேதேச அளவிலான போட்டியில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் இளநிலை மூன்றாமாண்டு ஆடை வடிவமைப்பியல் துறை  மாணவி மோ.பிரியா பங்கேற்று சிறப்பிடம் பெற்றார்.
  கேரள மாநிலத்துக்குள்பட்ட ஆலப்புழையில் அண்மையில் நடைபெற்ற போட்டியில்,  தமிழகத்தின் சார்பாக வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் பிரியா பங்கேற்றார். இவர் இளையோர் 72 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு 472.5 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். 
  இதனைத் தொடர்ந்து,  7 பிரிவுகளில் கீழ் நடைபெற்ற போட்டியில் மோ. பிரியா உள்பட மூன்று மாணவிகளுக்கு இரும்புப் பெண்மணி என்ற பட்டம் வழங்கப்பட்டது. 
  இதையடுத்து, பிரியா செப்டம்பர்  2-வது வாரத்தில் கனடாவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  இதற்காக,  மாணவி பிரியாவுக்கு கல்லூரியின் தாளாளர்  கே. பி. இராமசுவாமி, செயலாளர் முத்துவேல் ராமசுவாமி, கல்லூரி  முதல்வர் இரா. செல்வகுமரன், புலமுதன்மையர்கள்  ஆ. ஸ்டெல்லாபேபி (நிர்வாகம்),  எஸ். பி. விஜியகுமார் (கல்வி),  எம். என். பெரியசாமி (மாணவர் சேர்க்கை), உடற்கல்வி இயக்குநர்கள் டி. ரமேஷ், ஏ. லோகலட்சுமி, என். தவமணி ஆகியோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai