சுடச்சுட

  

  பண்ணைகளின் பக்கவாட்டில் படுதா கட்டுவது அவசியம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

  By DIN  |   Published on : 26th June 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், உயர்மனைகளின் பக்கவாட்டில் படுதா கட்டுவது அவசியம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட் செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:- வரும் மூன்று நாள்களுக்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை இரண்டு மில்லி மீட்டர் அளவிலே பெய்யக்கூடும். காற்று மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் தென் மேற்கிலிருந்து வீசும்.  வெப்ப நிலை அதிகபட்சமாக    98.6 டிகிரியும், குறைந்தபட்சம் 82 டிகிரியாகவும் இருக்கும்.
  சிறப்பு வானிலை ஆலோசனை:  தென்மேற்கு பருவமழையின் மிதமான தாக்கத்தால், மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 
  காற்றின் வேகம் சற்று அதிகரித்து காணப்படும். பகலில் வெப்ப அயற்சி போன்ற நிலை காணப்பட்டாலும், காற்று, மேகமூட்டத்தால் வெப்ப அயற்சியின் தாக்கம் இருக்காது. அவ்வப்போது. காற்றின் வேகம் உயர்ந்து காணப்படுமேயானால், பண்ணைகளின் பக்கவாட்டில் படுதாவை கட்டுவது சிறந்தது. மேலும். கோடை காலத்தில் பயன்படுத்திய மருந்துகளை இனி தீவனத்தில் பயன்படுத்த தேவையில்லை. தீவனத்தில் எரிசக்தியின் அளவை கூட்டி 2,550 முதல் 2,600 கிலோ இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால். தீவனத்தை உட்கொள்ளும் அளவு இயல்பாக இருப்பதோடு முட்டை எடையும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai