சுடச்சுட

  

  பள்ளி விடுவதற்கு தாமதமாவதால், பிற்பகலில் வரும் அரசுப் பேருந்தின் நேரத்தை மாற்ற வேண்டும் என அரசுப் பள்ளி மாணவியர், ஆட்சியரை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தனர்.
  நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது ஜம்புமடை கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எருமப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்து வருகின்றனர். காலையில் 8.30 மணிக்கு அரசுப் பேருந்து ஒன்று ஜம்புமடைக்கு வருகிறது. அதேபோல் பிற்பகல் 4.15 மணிக்கு எருமப்பட்டியில் இருந்து புறப்படுகிறது. ஆனால், மாலை 5.30 மணிக்கு பள்ளி விடுவதால், பேருந்தில் செல்ல முடியாமலும், பெற்றோரை வரவழைத்தும், கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவிலும் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மாணவியர் தெரிவிக்கின்றனர். எனவே, பிற்பகல் 4.15 மணிக்கு வரும் பேருந்தின் நேரத்தை 5.30 மணிக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும், ஜம்புமடை, வடவத்தூர், மெய்க்கல்நாயக்கன்பட்டி வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாணவியர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai