பகவத்கீதை  காட்டும் வழிமுறைகள்: நாமக்கல்லில் நாளைசொற்பொழிவு  தொடக்கம்

பகவத் கீதை காட்டும் வழிமுறைகள், இந்து மதத்தின் பெருமைகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு நாமக்கல்லில் ஜூன் 27, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

பகவத் கீதை காட்டும் வழிமுறைகள், இந்து மதத்தின் பெருமைகள் குறித்த சிறப்புச் சொற்பொழிவு நாமக்கல்லில் ஜூன் 27, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
 சின்மயா மிஷன் சார்பில், பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயாநந்தா ஆசியுடன், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள முல்லை மஹாலில் வரும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில், மாலை 6 மணி முதல் 8 மணி வரை, தமிழில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
இதில், அழிவற்ற இந்து மதத்தின் பெருமைகள், வாழ்வில் வெற்றி பெற அனுமன் காட்டும் வழிகள், வாழ்வில் அமைதி பெற பகவத்கீதை காட்டும் நெறிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவானது நடைபெறவுள்ளது.
இந்தச் சொற்பொழிவினை, நாகை சின்மயா மிஷனைச் சார்ந்த சுவாமி ராமகிருஷ்ணாநந்தாஜி நிகழ்த்துகிறார். இதில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசம். பக்தர்களும், ஆன்மிகத்தில் விருப்பம் கொண்டவர்களும் பெரும் திரளாக சொற்பொழிவில் பங்கேற்க வேண்டும் என சின்மயா மிஷன் நிர்வாகிகள் அழைப்பு
விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com