மோசடி செய்வோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்

முதியோர் உதவித் தொகை, வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி செய்வோரிடம் பொதுமக்கள்

முதியோர் உதவித் தொகை, வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாக மோசடி செய்வோரிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;-
கிராமங்களில் தனியாக வசிக்கும் முதியோர்களிடம் உதவித் தொகை வந்துள்ளதாக, போலி காசோலையை கொடுத்து முன்பணம் பெற்று ஏமாற்றி வருகின்றனர்.  மேலும், இரு சக்கர வாகனம் பரிசு விழுந்துள்ளதாகவும், அதற்கு பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என முன் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்கின்றனர். 
இதுமட்டுமின்றி,  வங்கியில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்து, கடையை விரிவுபடுத்துவதற்கும், வீடு கட்டுவதற்கும் வங்கிக் கடன் ஏற்பாடு செய்து தருவதாகவும் சிலர் ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் வங்கிக் கணக்கு,  ஏடிஎம் கார்டுகளை பெற்றுச் சென்று அதிலிருந்து பணத்தை எடுத்து ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. 
பொதுவாக,  எந்த வங்கியிலிருந்தும் நேரில் வந்து வங்கிக் கடன் தருவதாகவோ அல்லது வங்கி ஏடிஎம் எண்ணை கேட்டோ யாரும் வீடு தேடி வரமாட்டார்கள். 
அரசுத் துறையிலிருந்தும் குறிப்பாக வருவாய்த் துறையிலிருந்து நேரில் வந்து ழுதியோர் பணம் வந்திருப்பதாகத் தெரிவித்து,  பணம் கேட்கமாட்டார்கள். 
எனவே, பொதுமக்கள் தங்களை தேடிவந்து உதவி செய்வது போல் நடித்து பணம் அல்லது நகைகள் போன்றவற்றை ஏமாற்றி வாங்கி செல்லும் மோசடி ஆசாமிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
எந்த வகையிலும் ஏமாந்து விட வேண்டாம். அதேபோல் செல்லிடப்சியில் வங்கி மேலாளர் அழைக்கிறார் என வரும் அனைத்து அழைப்புகளையும் உடனே தவிர்க்க வேண்டும். எந்தக்காரணம் கொண்டும் ஏடிஎம் எண்ணை யாரிடமும் சொல்லக்கூடாது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com