காவிரி ஆற்றில் மணல் கடத்தல்: 5 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி போலீஸார் விசாரணை
By DIN | Published On : 04th March 2019 09:02 AM | Last Updated : 04th March 2019 09:02 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 5 இருசக்கர வாகனங்களை கைப்பற்றி, தப்பியோடிய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து
இருசக்கர வாகனங்கள் மூலம் மணல் கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீஸார் உதவியுடன் பிலிக்கல்பாளையம் காவிரியாற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், இருசக்கர வாகனங்களை விட்டுவிட்டு மணல் கடத்தல் காரர்கள் தப்பியோடி விட்டனர். இதையடுத்து 5 இருசக்கர வாகனங்களை போலீஸார் கைப்பற்றி, தப்பியோடிய 5 பேர் குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.