சுடச்சுட

  

  கோழிகளுக்கான தீவன எடுப்பு குறையும்: நாமக்கல் வானிலை ஆய்வு மையம்

  By DIN  |   Published on : 16th March 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாறி வரும் பருவநிலையால், கோழிக்கான தீவன எடுப்பு குறைவதுடன்,  முட்டையின் எடை மற்றும் ஓட்டின் தரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதாக நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
  வரும் நான்கு நாள்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை.  காற்றின் வேகம் மணிக்கு 6 கிலோ மீட்டரில் தென்கிழக்கில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலையை பொருத்தவரை, அதிகபட்சமாக 102.2  டிகிரியாகவும், குறைந்தபட்சம் 71,6 டிகிரியாகவும் இருக்கும். 
  கோழிப் பண்ணையாளர்களுக்கான ஆலோசனை:  வரும் நான்கு நாள்களும், காற்றின் வேகம் பிற்பகலுக்கு மேல் சற்றே அதிகரித்து காணப்படும். இதனால் இரவில் வெப்ப அயற்சியின் தாக்கம் கோழிகளுக்கு குறைவாகவே இருக்கும். மேலும், தீவன எடுப்பு குறைவதால், முட்டையின் எடை சற்றுக் குறைந்தும் முட்டை ஓட்டின் தரமும் பாதிக்கப்படும். சரியான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு முட்டையின் எடை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டையின் ஓடு உடையாமல் இருக்க தீவனத்தில் தரமான சோடா உப்பை சேர்த்து வர வேண்டும். 
  நாட்டுக் கோழிகளை பொருத்தமட்டில், வெயில் அதிகரிப்பு காரணமாக கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளும் நிலை இருக்கும். அவற்றின் இட வசதியை அதிகரித்து, தீவனத்தில் நார்ச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai