சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே ரூ.1.40 லட்சம் பறிமுதல்

  By DIN  |   Published on : 16th March 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வேலூர் காவிரி பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.40 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மூன்று பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உதவி வேளாண்மை அலுவலர் (வேளாண்,வணிகம்) செங்கோடன் தலைமையிலான பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழுவினர் வேலூர் காவிரி பாலம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில் கரூர் மாவட்டம், அரியாக்காரன்பாளையத்தைச் சேர்ந்த மருதுபாண்டி (23) என்பதும்,  தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது. அதன்படி மருதுபாண்டியிடம் இருந்து ரூ.1.40 லட்சத்தை பறிமுதல் செய்து பரமத்தி வேலூர் சட்டப்பேரவைத்தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரான தேவிகாராணியிடம் ஒப்படைத்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai