சுடச்சுட

  

  குமாரபாளையத்தில் பல் மருத்துவ சிகிச்சை விழிப்புணர்வு ஊர்வலம்

  By DIN  |   Published on : 17th March 2019 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  குமாரபாளையத்தில் பல்நோய் மருத்துவ சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது.
  உலக பல் மருத்துவர் தினத்தை முன்னிட்டு குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு கல்லூரித் தலைவர் என்.செந்தாமரை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் எஸ்.ஓம் சரவணா முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார்.
  குமாரபாளையம் சரவணா திரையரங்கு அருகே தொடங்கிய ஊர்வலத்தை காவல் ஆய்வாளர் தேவி தொடக்கி வைத்தார். 
  நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில் பல் சொத்தை, துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல், சீரற்ற பல்வரிசை, ஈறுகளில் சீழ் வடிதல், வாய்ப் புற்றுநோய் ஆகிய பல் நோய்களால் பாதிப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க முறையாக பல் துலக்க வேண்டும், தவறான உணவுப் பழக்க வழக்கங்களைக் கைவிட வேண்டும், பல்லில் ஒட்டும் உணவுப் பண்டங்களை உண்ணக் கூடாது.
  நாள்தோறும் இருமுறை பல் துலக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பல் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உணவு உண்ட பின்னர் பல் துலக்க வேண்டும் என ஊர்வலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
  தொடர்ந்து, இலவச பல்நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai