சுடச்சுட

  

  பரமத்தி வேலூர் காவிரியோரம் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை

  By DIN  |   Published on : 17th March 2019 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பரமத்தி வேலூர் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர் மணல் திருட்டைத் தடுக்கும் வகையில், பொதுப்பணித் துறையினர் ஆழமான பள்ளம் தோண்டி மணல் திருட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
  பரமத்தி வேலூர் காவிரி கரையோரப் பகுதிகளில் சிலர் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக பொதுப்பணித் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் பொதுப்பணிதுறை சார்பில் தொடர் மணல் திருட்டை தடுக்க நன்செய்இடையாறு, அனிச்சம்பாளையம், குட்டுக்காடு, பொன்மலர்பாளையம், கொந்தளம், கருக்கம்பாளையம், வெங்கரை  உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் சனிக்கிழமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் மணல் எடுக்க செல்லும் வழித்தடங்களில் ஆழமான பள்ளம் தோண்டியும், காவரி ஆற்றின் நடுவே மணல் எடுக்க செல்வதற்காக போடப்பட்டிருந்த சிமெண்ட் குழாய் பாலங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.
  மேலும் இதுபோன்ற மணல் திருட்டில் மீண்டும் ஈடுபடுபவர்கள் மீது கடுமையன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரமத்தி வேலூர் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் வினோத்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai