சுடச்சுட

  


  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டை விலை 370 காசுகளாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. முட்டைக்கோழி, கறிக்கோழி விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
  நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் பி. செல்வராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. முட்டை நுகர்வு குறைந்து வருவது, பிற மண்டலங்களில் சரிந்து வரும் முட்டை விலை ஆகியவை தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
  அதைத் தொடர்ந்து, பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு முட்டை விலை 370 காசுகளாகவே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): சென்னை-375, ஹைதராபாத்-335, விஜயவாடா-360, பர்வாலா-335, மும்பை-385, மைசூரு-370, பெங்களூரு-360, கொல்கத்தா-408, தில்லி-360, ஹோஸ்பெட்-325.
  பல்லடத்தில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 53-ஆகவும், கறிக்கோழி ரூ. 68-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai