சுடச்சுட

  


  மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும் நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
  தமிழகம், புதுச்சேரியில், மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
  அதற்கான மனு தாக்கல் வரும் செவ்வாய்க்கிழமை(19--ஆம் தேதி) தொடங்கி, 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 27-ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 29-ஆம் தேதி மனு திரும்ப பெறுதல், அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகின்றன.
  மாவட்டத்தில் ஒரு மக்களவைத் தொகுதி இருக்கும் பட்சத்தில் ஆட்சியர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், இரு தொகுதிகள் என்றால் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றொரு தேர்தல் அலுவலராகவும் பொறுப்பு வகிப்பார்.
  நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அலுவலராக ஆட்சியர் மு.ஆசியா மரியம் உள்ளார். இத்தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில், துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் உதவி தேர்தல் அலுவலராகப் பணியில் இருப்பர். 
  மனு தாக்கல் தொடங்க இருப்பதையொட்டி, வேட்பு மனு அளிக்க வரும் வாகனங்கள் 100 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தும் வகையில், சாலையில் எல்லைக்கோடு வரையப்பட்டுள்ளது. ஒரு வாகனம் மட்டுமே ஆட்சியர் அலுவலகம் வரையில் வருவதற்கான அனுமதி உள்ளது. வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்போது, அவருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
  வேட்பாளரை முன்மொழிபவர்கள் 10 பேர் இத் தொகுதிக்குள்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதியாகும். மனுத்தாக்கலையொட்டி, ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் வேட்பாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் ஆகியோர் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர். இதற்கான ஏற்பாடுகளை நல்லிபாளையம் போலீஸார் செய்து
  வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai