டிரினிடி மகளிர் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம்

: நாமக்கல்  டிரினிடி மகளிர் அறிவியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


: நாமக்கல்  டிரினிடி மகளிர் அறிவியல் கல்லூரியில் மெகா வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சோனா யுக்தி மற்றும் ஹையர் மீ நிறுவனங்களுடன் இணைந்து டிரினிடி கல்லூரி நடத்திய இம் முகாமை, கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே. செங்கோடன் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் எம்.ஆர். லட்சுமிநாராயணன் வரவேற்றார். கல்லூரி வேலை வாய்ப்பு இயக்குநர் கே. மனோகரன், சோனா யுக்தி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர்கள் என். விஜயானந்த் மற்றும் ஏ. ஆசிப் அலி உள்ளிட்டோர், வேலைவாய்ப்பு வளாகத் தேர்வுகளின் நோக்கம் குறித்து மாணவியருக்கு எடுத்துரைத்தனர்.
டிரினிடி கல்லூரிச் செயலர் கே. நல்லுசாமி, டிரினிடி மெட்ரிக். பள்ளித் தலைவர் ஆர். குழந்தைவேல், டிரினிடி மெட்ரிக் அகாதெமி பள்ளிச் செயலர் டி. சந்திரசேகரன் ஆகியோர் வேலைவாய்பபு முகாமில் பங்கேற்ற மாணவியருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.   
மேலும்,  முகாமில் வீ.டெக்னாலஜீஸ், ஏவியான், எம்பிடிஏ, புரானி டெக்ஸ், காலிபர், ஐடிபிஐ பெடரல், சிமோ, ஆல்செக் டெக்னாலஜிஸ், கார்வி டிஜிடெக், நிப்பான் சேகி, ரெசசர், புளு ஓசன், ஈக்விடாஸ், இந்துஜா ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. 
வங்கி, நிதியியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், உணவு உற்பத்தி, மின்னியல், மின்னணுவியல், சந்தையியல், மேலாண்மை, நிர்வாகம், பொறியியல், காப்பீடு, சில்லறை வர்த்தகம் ஆகிய பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. நாமக்கல், திருச்சி, கரூர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.  இம்முகாம் மூலம் முதல் கட்டமாக 400--க்கும் மேற்பட்டவர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.   இந் நிகழ்ச்சியில், கல்லூரி நிர்வாக அலுவலர் என்.எஸ். செந்தில்குமார், கல்லூரி வேலை வாய்ப்பு துறை சார்ந்த பொறுப்பாளர்கள் பி. சுதா, எஸ். உஷாராணி, டி. கவிதா, ஜி. சத்யசங்கரி, எம். சித்ரா, எஸ். மைதிலி, எஸ். லட்சுமி, துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com