மேலும்  இரு பெண்களிடம் 7 பவுன் நகை பறிப்பு

பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உள்பட்ட நல்லூர் அருகே உள்ள அனியார்,

பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உள்பட்ட நல்லூர் அருகே உள்ள அனியார், கண்ணன் தோட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி வளர்செல்வி  (50). இவர் குழந்தப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை மாலை வீட்டுக்குச் செல்வதற்காக குழந்தப்பாளையத்திலிருந்து புறப்பட்டு செக்குப்பட்டி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் வளர்செல்வியை வழிமறித்து  கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனர். 
அதே போல வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்னதளிகயைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி நல்லம்மாள் (55). இவர் அங்குள்ள கோழிப்பண்னை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் வழிக் கேட்பது போல் நல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர். இந்த நான்கு நகை பறிப்பு சம்பவங்கள் குறித்தும் பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com