டிரினிடி மகளிர் கல்லூரியில் சான்றிதழ் வழங்கும் விழா

நாமக்கல்  டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்களுக்கு பல்கலைக்கழகப் பாடத் திட்டத்துடன்

நாமக்கல்  டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்களுக்கு பல்கலைக்கழகப் பாடத் திட்டத்துடன் உடனடி வேலைவாய்ப்பினை பெறும் வகையில் கல்லூரி வளாகத்தில் தினமும் 1 மணி நேரம் மதிப்புக் கூட்டப்பட்ட பாடப் பிரிவுகள் இக்கல்வியாண்டில் நடத்தப்பட்டன. இதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  
கல்லூரித் தலைவர் பி.எஸ்.கே.செங்கோடன்,  செயலர் கே.நல்லுசாமி ஆகியோர் பங்கேற்று மாணவியர்களுக்கும், அதன் பொறுப்பாசிரியைகளுக்கும் சான்றிதழ்களை வழங்கினர். கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் வரவேற்றார்.  ஒருங்கிணைப்பாளர் ஆர். நவமணி மதிப்புக் கூட்டப்பட்ட பாடங்கள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.  டிரினிடி அகாதெமி தலைவர் ஆர். குழந்தைவேல் மற்றும் அதன் செயலர் டி. சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள், கணித பகுப்பாய்வுத் தேர்வு, ஆங்கில மொழி தகவல் தொடர்பியல், கணினி இணையதள தேர்வுகள், மின்னஞ்சல் பரிமாற்றம், இணையதளம் மூலம் தகவல் சேகரிப்பு, இயற்பியல் மற்றும் வேதியியல் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும்  நுணுக்கம்,  கணக்குப் பதிவியல் மற்றும் ஜி.எஸ்.டி குறித்த விழிப்புணர்வு போன்றவை இந்த மதிப்புக் கூட்டப்பட்ட பாடப்பிரிவுகளில் இடம் பெற்றிருந்தன.
இதன் பொறுப்பாளர்களான ஆர்.சாவித்திரி,  எஸ்.லதா,  எஸ்.பூர்ணிமா, பி.சுதா,  ஆர்.பூவிதா,  பி.கவிதா, பி.சித்ரா, எல்.தமிழ்ச்செல்வி, எஸ்.தேவி, கல்லூரி நிர்வாக அலுவலர் திரு.என்.எஸ்.செந்தில்குமார், கல்லூரி வேலை வாய்ப்பு இயக்குநர் கே.மனோகரன் உள்பட துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியைகள் மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com