பாவை பொறியியல் கல்லூரி, பிரிட்டிஷ் கவுன்சில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி - பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொண்டது. 


ராசிபுரம் பாவை பொறியியல் கல்லூரி - பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொண்டது. 
பிரிட்டிஷ் கவுன்சில் என்பது பன்னாட்டு அளவிலான கலாசாரம், வாய்ப்புகள், ஆங்கில மொழியின் பயன்பாடு போன்றவற்றை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் நிறுவனமாகும். 
இந்நிறுவனம் ஆங்கில புலமைக்கான சர்வதேச சான்றிதழ் தேர்வான ஐ.இ.எல்.டி.எஸ். என்ற தேர்வை நடத்தி வருகிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரி பிரிட்டிஷ் கவுன்சில் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு பயிற்சி மையத்துக்கான அனுமதி பெற்றுள்ளது. 
மேலும் பிரிட்டிஷ் கவுன்சில் ஐ.இ.எல்.டி.எஸ். பார்ட்னர் புரோகிராமில் உறுப்பினராகவும் இணைந்தள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவியர் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பில் தங்களை பதிவு செய்து கொண்டு,  ஐ.இ.எல்.டி.எஸ்.  தேர்வுக்கான பயிற்சியையும் பெறுவதற்கு பாவை பொறியியல் கல்லூரி வழிவகை செய்துள்ளது. 
இதற்காக சிறப்பாகச் செயலாற்றிய பாவை பொறியியல் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் ஆர்.சாந்தி உள்ளிட்ட பேராசிரியர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் (நிர்வாகம்) கே.கே.ராமசாமி, இயக்குநர் (சேர்க்கை) கே.கே.செந்தில், பாவை பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.பிரேம்குமார் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com