ராசிபுரத்தில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 24th March 2019 05:21 AM | Last Updated : 24th March 2019 05:21 AM | அ+அ அ- |

ராசிபுரம் அரிமா சங்கம், அங்கம்மாள் குடும்ப அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, நாமக்கல் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை மார்ச் 24-இல் (ஞாயிற்றுக்கிழமை) ராசிபுரத்தில் நடத்துகிறது.
ராசிபுரம் சுமங்கலி மஹால் அரிமா சங்க திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும். போக்குவரத்து, உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.