Enable Javscript for better performance
சுயேச்சையாக களமிறங்கும் பி.கே.எஸ்.காளியப்பன்கள்- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மக்களவைத் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் டிஎல்எஸ் பி.காளியப்பனுக்குப் போட்டியாக, மூன்று காளியப்பன்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
     நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக, அக் கட்சியின் மாவட்ட பொருளாளர் டிஎல்எஸ் பி.காளியப்பன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கொ.ம.தே.க.,வைச் சார்ந்த ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இத் தேர்தலில் அ.தி.மு.க.,வின் வாக்குகளை பிரிக்கும் பொருட்டு, வேட்பாளர் காளியப்பன் பெயருடைய மூன்று பேரை, கொ.ம.தே.க. தரப்பு வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளதாகத் தெரிகிறது.
     வேட்பு மனுத் தாக்கலுக்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாள் என்பதால், காளியப்பன் பெயர் கொண்ட மூன்று பேரும் ஒன்றாக வந்தனர். ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை தண்ணீர் பந்தல் காடு பகுதியைச் சேர்ந்த விவசாயியான பி.காளியப்பன் (61), பட்டணம் பேரூராட்சியைச் சேர்ந்த கே.காளியப்பன் (72), தொட்டியம்பட்டியைச் சேர்ந்த எஸ்.காளியப்பன்(64) இவர்கள் மூவரும் தனித்தனியாக தங்களது மனுவை தாக்கல் செய்தனர்.
     ஒவ்வொரு தேர்தலின்போதும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்க அவர் பெயர் கொண்ட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வது வழக்கம். தற்போதைய தேர்தலில் காளியப்பன்கள் பெயரில், அ.தி.மு.க., வேட்பாளர் உள்பட 4 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால், கொ.ம.தே.க. வேட்பாளர் பெயரில் சுயேச்சைகள் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai