Enable Javscript for better performance
திருச்செங்கோட்டில் ரூ.6.30 லட்சம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் மேற்பார்வையாளர்கள், பறக்கும் படையினர், அலுவலர்கள் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
     நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு காளிப்பட்டி சேலம் பிரதான சாலையில் தேர்தல் சிறப்பு பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கருமத்தம்பட்டி யைச் சேர்ந்த தீபாராம் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோன்று சேலம் சாலையில் ஆய்வில் ஈடுபட்டிருந்த தேர்தல் நிலை குழுவினர் காரில் சேலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர் . இரு வேறு சம்பவங்களில் 6 லட்சத்து முப்பதாயிரம் ரூபாயினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை ஆய்வு செய்த திருச்செங்கோடு கோட்டாட்சியர் மணிராஜ் பறிமுதல் செய்த தொகை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், தக்க ஆவணங்களைக் காட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai