Enable Javscript for better performance
தொழிலாளி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் அருகே தொழிலாளி கொலையுண்ட வழக்கில், இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
     நாமக்கல் மாசிகங்காணி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரமேஷ்(29). இவர் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள லாரி பட்டறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2016 ஜூன் 8-ஆம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மறுநாள்(9--ஆம் தேதி) காலையிலும் கணவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சிக்குள்ளான ரமேஷின் மனைவி மைதிலி(26), தனது சித்தப்பா மாதேஸ்வரனை அழைத்துக் கொண்டு, நல்லிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் தேடினார்.
     அப்போது, அங்குள்ள தனியார் வேபிரிட்ஜ் பின்புறம் முகம் சிதைந்த நிலையில் ரமேஷ் கொலையுண்டு கிடந்தார். அதையடுத்து, நல்லிப்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பெண் விவகாரத்தில் ரமேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன்(26), கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர்(20), மோகனூரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற பிரபு(23), கீழ்பாலப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற அசோக்(19) ஆகியோர் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
     போலீஸார் நால்வரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ் வழக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி ஹெச்.இளவழகன், முதல் குற்றவாளியான லட்சுமணனுக்கு, இரு பிரிவுகளில் இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai