Enable Javscript for better performance
நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது: 8 பவுன் நகை பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது: 8 பவுன் நகை பறிமுதல்

    By DIN  |   Published on : 27th March 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் பகுதியில் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டுவந்த இளைஞரை பரமத்தி போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து 8 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரகத்துக்கு உள்பட்ட கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே பரமத்தி போலீஸார் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் சேலம் ஜாகீர்அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் ஹரிஹரசுதன் (31) என்பதும், இவர் பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் 4-ஆம் தேதி மோகனூர் வட்டம், கே.அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மனைவி ஜெயலட்சுமியிடம் 5 பவுன் நகை, பரமத்தி வேலூர் பொன்னிநகரைச் சேர்ந்த நல்லம்மாளிடம் 3 பவுன் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து ஹரிஹரசுதனிடம் இருந்து 8 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai