Enable Javscript for better performance
நாமக்கல் மாவட்டத்துக்கு 6,034 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மாவட்டத்துக்கு 6,034 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

    By DIN  |   Published on : 27th March 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 6,024 வாக்குப்பதிவு தொடர்பான இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
     நாமக்கல் மாவட்டத்துக்குள்பட்ட நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக, திங்கள்கிழமை பிற்பகலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
     மக்களவைத் தேர்தலுக்காக, ராசிபுரம் தொகுதியில் 261 வாக்குச் சாவடிகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 283, நாமக்கல்லில் 287, பரமத்தி வேலூரில் 254, திருச்செங்கோட்டில் 261, குமாரபாளையம் தொகுதியில் 280 என மொத்தம் 1,626 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
     இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்துவதற்காக தேர்தல் ஆணையத்தால் 3,773 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,981 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,180 எண்ணிக்கையில் வாக்காளர் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு இயந்திரம் (விவிபேட்) உள்ளிட்டவை நாமக்கல் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை 6 சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பிரித்து, சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கும் பணி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
     மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் முன்னிலையில் இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குச்சாவடி எண்ணிக்கை அடிப்படையில் 21.6 சதவீதம் கூடுதலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள், தேவையைக் காட்டிலும் 27.5 சதவீதம் கூடுதலாகவே அனுப்பி வைக்கப்பப்பட்டன.
     தொகுதி வாரியாக அனுப்பிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவரம்: ராசிபுரம்- தலா 318 வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம், 333 ஒப்புகைச்சீட்டு இயந்திரம். சேந்தமங்கலம்- தலா 345 வாக்குப்பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரம், 361 ஒப்புகைச்சீட்டு இயந்திரம். நாமக்கல்-349 வாக்குப்பதிவு மற்றும் 366 ஒப்புகைச்சீட்டு இயந்திரம்.
     பரமத்தி வேலூர்-309 வாக்குப்பதிவு இயந்திரம், 324 ஒப்புகைச்சீட்டு இயந்திரம், திருச்செங்கோடு- 318 வாக்குப்பதிவு இயந்திரம், 333 ஒப்புகைச்சீட்டு இயந்திரம், குமாரபாளையம்-341 வாக்குப்பதிவு இயந்திரம், 357 ஒப்புகைச்சீட்டு இயந்திரம். வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் 1,980, ஒப்புகைச்சீட்டு இயந்திரம் 2,074. இவை தவிர, மேலும், 1,800 இயந்திரங்கள் அவசர தேவை கருதி பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
     வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியை தொகுதி உதவி தேர்தல் அலுவலர்களான நாமக்கல் சார்-ஆட்சியர் சு.கிராந்தி குமார்பதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ப.மணிராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் பி.சந்திரா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் மு.துரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெ.தேவிகாராணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் மு.மரகதவள்ளி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai