Enable Javscript for better performance
நீட் தேர்வு மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கு- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் - கீரனூர் பகுதிகளில் இயங்கி வரும் வெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஹைதராபாத் ஸ்ரீசைதன்யா பயிற்சி மையம் மூலம் நடத்தப்பட்டு வரும் இதில் ஏராளமான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இம் மாணவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் தன்னம்பிக்கை பயிலரங்கு வெற்றி விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     பயிலரங்கு துவக்க விழாவில், கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் எஸ்.குணசேகரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.விஜயகிரி பங்கேற்றார். பயிலரங்கு துவக்க விழாவில் அவர் பேசுகையில், எண்ணம், சொல், செயல் இவற்றில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும், எந்த ஒரு நல்ல செயலையும் உடனடியாக செய்யும் பழக்கம் இருக்க வேண்டும். தள்ளிப்போடுவது நமது முதல் எதிரி, எதை சம்பாதிக்கிறீர்களோ அதில் ஒருபகுதியை சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுங்கள், எதை கற்றுக் கொள்கிறீர்களோ அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என்றார்.
     நீட் தேர்வில் வெற்றி பெற மாணவ, மாணவியர் எந்தவிதமான கற்றல் முறைகளைக் கையாள வேண்டும், படிப்பதற்கான மிகச் சிறந்த வழிமுறைகளை பின்பற்றுவது என தன்னம்பிக்கை பயிலரங்கில் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. விழாவில், அகில இந்திய அளவிலான மாதிரி நீட் தேர்வுகளில் முதன்மை இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு வெற்றி விகாஸ் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
     விழாவில், கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜி.வெற்றிச்செல்வன், செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச்செயலாளர் ஆர்.யு. சிற்றரசன், பொருளாளர் பழனிவேல், ஜி. விஜய், இயக்குநர்கள் துரைசாமி, கே.சந்திரசேகரன், என். மாரிமுத்து, ரவி, தாசப்பிரகாசம் உள்ளிட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
     பப்ளிக் பள்ளி பட்டமளிப்பு விழா: இதே போல், ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில் நடைபெற்ற மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், டாக்டர் டி.விஜயகிரி பங்கேற்று மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினார். இதில் திரளான மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai