Enable Javscript for better performance
தீப்பற்றி எரிந்த பஞ்சு மூட்டைகள் லாரி- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் அருகே பஞ்சு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தீப்பற்றியதில் முழுவதும்  எரிந்து சேதமடைந்தது.  
    சேலம் மாவட்டம்,  ஆத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (45). இவர் தனக்குச் சொந்தமான லாரியில்,  கள்ளக்குறிச்சியில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.  இந்த லாரி ராசிபுரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது,  லாரியின் பின்புறம் இருந்த பஞ்சு மூட்டைகள் தீப்பற்றியதில் புகைவந்துள்ளது. இதனைப் பின்னால் வந்த மற்றொரு லாரியின் ஓட்டுநர் பார்த்து தெரிவித்ததையடுத்து, பஞ்சு மூட்டைகள் லாரியை சாலையின் ஓரம் நிறுத்தி விட்டு, ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தீயணைப்புத் துறையினர் வராததால், பஞ்சு மூட்டைகள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. தீ மளமளவென பரவியதில் லாரியும் தீப்பற்றி முழுவதும் எரிந்தது. 
    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், லாரியில் போதிய தண்ணீர் இல்லாததால், தனியார் தண்ணீரை லாரி வரவழைத்து அதன் மூலம் தீயை அணைத்தனர். இது குறித்து ராசிபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai