Enable Javscript for better performance
தோல்வி பயம்: பொள்ளாச்சி சம்பவம் திசை திருப்பப்படுகிறது- Dinamani

சுடச்சுட

    

    தோல்வி பயம்: பொள்ளாச்சி சம்பவம் திசை திருப்பப்படுகிறது

    By DIN  |   Published on : 28th March 2019 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தோல்வி பயம் காரணமாக பொள்ளாச்சி சம்பவம் திசை திருப்பப்படுகிறது என்று, அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
    நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையத்தில், ஈரோடு மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் பேசினர்.
    தொடர்ந்து, அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது:   திருச்செங்கோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில்,   அமைச்சரோ,  முதல்வரோ நேரடியாக ஒரே மேடையில் என்னைச் சந்திக்கத் தயாரா?  என கேள்வி எழுப்பியுள்ளார்.  நான்  எப்போது,  எங்கே எந்த மேடையானாலும் சந்திக்கத் தயார்.  தேர்தலில் அவர்களது தோல்வி உறுதியானதால்,  மக்களை திசை திருப்புவதற்காக, தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்.  காழ்ப்புணர்வினாலேயே  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது ஒருபோதும் நடக்காது.  பொள்ளாச்சி சம்பவத்தை முதலில் வெளிக்கொண்டு வந்ததே பேரவைத் துணைத் தலைவர்  ஜெயராமன்தான்.  அதனால் ஈஸ்வரனுக்கு நான் சவால் விடுக்கிறேன்,  எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai