Enable Javscript for better performance
பரமத்தி வேலூர் நகர் பகுதியில் தொடரும் மின்தடை: பள்ளி மாணவர்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் நகர் பகுதியில் தொடரும் மின்தடை: பள்ளி மாணவர்கள் அவதி

    By DIN  |   Published on : 28th March 2019 09:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் பகுதியில் தொடர்ந்து சில தினங்களாக மாலை நேரங்களில் மின் வெட்டால் பள்ளி மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
     11, 12 - ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த மூன்று நாள்களாக மாலை நேரங்களில் பரமத்தி வேலூர், பொத்தனூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசுப் பள்ளிகளில் தேர்வு தொடங்கப்படாத நிலையில் மாலை நேரங்களில் ஏற்படும் மின் வெட்டால் மாணவ,மாணவியர், வர்த்தக நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தேர்வு முடியும் வரை மின்வெட்டு ஏற்படாமல் மின்வாரியத்தினர் தவிர்க்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ராணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மின் அழுத்தம் அதிகரித்துள்ளதாலும்,  சில இடங்களில் புதிதாக மின்மாற்றிகள் பொருத்துவது உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாலும் மின் நிறுத்தம் செய்யப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  இனி முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படாது என்றார்.

        

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai