Enable Javscript for better performance
பரமத்தி வேலூர் மகாமாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர் மகாமாரியம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா

    By DIN  |   Published on : 28th March 2019 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு பூச்சாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 
    பரமத்தி வேலூர் மகா மாரியம்மன் கோயில் திருத்தேர் பெருவிழா ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு வேலூர் நண்பர்கள் குழு சார்பில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதில் 8 பட்டியைச் சேர்ந்த பெண்களும், குழந்தைகளும் பூக்களுடன் கோயிலை வந்தடைந்தனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பூச்சாட்டி, பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூர் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai