Enable Javscript for better performance
மரக்கன்று நடுவதில் இளைஞர்கள் ஆர்வம்- Dinamani

சுடச்சுட

    

    சேந்தமங்கலம் அருகே சின்னகுளம் ஏரியில் பசுமை சுற்றுச்சூழல் அமைப்பினர் மரக்கன்று நடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில் அருகில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் சின்னகுளம் ஏரி அமைந்துள்ளது. அந்த ஏரிப்பகுதியில் முள்செடிகள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகின்றன. ஏரிப்பகுதியை பசுமையாக்கும் விதமாக, பசுமை சுற்றுச்சூழல் அமைப்பினர் மரக்கன்றுகளை நட முடிவு செய்தனர். கடந்த 6 மாதத்தில் ஆலம், அரசு, வேம்பு உள்ளிட்ட நாட்டு ரக மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். பசுமை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் மேற்கொள்ளும் இப்பணிக்கு அப்பகுதி இளைஞர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai