Enable Javscript for better performance
லாரி மோதியதில் காவலாளி பலி- Dinamani

சுடச்சுட

    

    மோகனூர் அருகே லாரி மோதியதில் காவலாளி உயிரிழந்தார்.
    திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் அருகேயுள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (68). இவர் என்.புதுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வளையப்பட்டி - நாமக்கல் சாலையில் நடந்து சென்றார்.  அப்போது அவ்வழியாகச் சென்ற லாரி தங்கராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு,  நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இது தொடர்பாக, மோகனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே  பயணத்தம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன்(30) என்பவரை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai