Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட  திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம், நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும்  கே.எஸ்.ஆர்.  கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    இந்தப் பேரணியை திருச்செங்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம், கல்வி நிறுவன துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
    தேர்தல் பிரிவு அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் நேர்மையாக வாக்களிப்போம்,  ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், ஓட்டுரிமை எங்கள் உரிமை,  உங்கள் ஓட்டு உங்கள் எதிர்காலம் என்ற வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி வாசகங்களை வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.
    இப் பேரணியானது திருச்செங்கோடு நகரின் முக்கிய வீதிகளில் வழியாக நடைபெற்றது. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
        

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai