Enable Javscript for better performance
விவேகானந்தா கல்லூரியில்  சர்வதேச அளவிலான மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை,  மலேசியா ஆசிய பசிபிக் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் மற்றும் கண்டுபிடிப்புத் துறையுடன் இணைந்து 2 நாள் தகவல் தொடர்பியலின் நவீனப் போக்குகள் மற்றும் தொழில் நுட்பவியல் குறித்த சர்வதேச மாநாடு மற்றும் பயிற்சிப் பட்டறை அண்மையில்  நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு  கல்வி நிறுவனங்களின் தாளாளர் மு.கருணாநிதி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். இந்த மாநாட்டில் ஆசிய, பசிபிக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் திருச்செல்வம், செல்வக்குமார் சாமுவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
    தமிழ்நாடு,  கர்நாடகம், புதுச்சேரி,  யு.எஸ்.ஆகிய இடங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைடுகளையும், கருத்துகளையும் வழங்கினர். மாநாட்டின் தொடக்கத்தில் கட்டுரையாளர்களின் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை நூலாக வெளியிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai