கொல்லிமலையில் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி இன்று தொடக்கம்

கொல்லிமலை தோட்டக்கலைப் பண்ணைகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு பயிற்சி முகாம்  வியாழக்கிழமை (ஏப்.2) தொடங்குகிறது.

கொல்லிமலை தோட்டக்கலைப் பண்ணைகளில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான சிறப்பு பயிற்சி முகாம்  வியாழக்கிழமை (ஏப்.2) தொடங்குகிறது.
இது தொடர்பாக, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எஸ்.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:   தோட்டக்கலையின் முக்கியத்துவத்தை  நகர்ப்புற மக்களுக்கு உணர்த்தவும், தோட்டக்கலை பயிர் சாகுபடி முறைகளில் உள்ள சமீபத்திய தொழில்நுட்பங்களை நேரடியாக பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திடவும், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில், கொல்லிமலையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில்  (செம்மேடு மற்றும் படசோலை)  பண்ணை சுற்றுலா மற்றும் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பது, வீட்டுக் காய்கறித் தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் சாக்லெட் தயாரித்தல் போன்றவற்றில் பயிற்சி பெறுவதற்காக மூன்று நாள்கள் கோடை பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இம் முகாமானது, வியாழக்கிழமை (மே 2) தொடங்குகிறது. தொடர்ந்து,  வெள்ளி, சனிக்கிழமைகளிலும் (மே 3, 4)  நடைபெற உள்ளது. மூன்று நாள்களுக்கு பயிற்சி கட்டணமாக, நாளொன்றுக்கு  ரூ.100 வீதம் ரூ.300 செலுத்த வேண்டும். இந்த பயிற்சியின்போது பயிற்சி கையேடு, குறிப்பேடு மற்றும் பேனா
வழங்கப்படும். 
பயிற்சி நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் நடவுச் செடி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, தோட்டக்கலை உதவி இயக்குநர், கொல்லிமலை(94438-98919) மற்றும் பண்ணை மேலாளர்கள், அரசு தோட்டக்கலைப் பண்ணை படசோலை(86609-59576)மற்றும் செம்மேடு (94430-25428) ஆகியோரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com