அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
By DIN | Published On : 05th May 2019 05:15 AM | Last Updated : 05th May 2019 05:15 AM | அ+அ அ- |

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட முக்கியமான கோயில்களில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தலைமையில் கோயிலில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பணிகள் குறித்து கள ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பாதுகாப்பு பிரிவு அலுவலர் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். கோயிலில் சாதாரண நாள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள், திருவிழா காலங்களில் மேற்கொள்ளப்படும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ரவிக்குமார் ஆலோசனை நடத்தினார். மேலும் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்தும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, மின்வாரியம், நகராட்சி, தீயணைப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...