ஜி.எஸ்.டி. வரி அனைத்தையும் 10 சதவிகித வரிக்குள் கொண்டு வரவேண்டும்

 பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்க மகாசபைக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி  வரி விகிதங்கள் அனைத்தையும் 10 சதவிகித வரிக்குள்  கொண்டு வரவேண்டும் என


 பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்க மகாசபைக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி  வரி விகிதங்கள் அனைத்தையும் 10 சதவிகித வரிக்குள்  கொண்டு வரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கத்தின் 51-ஆவது ஆண்டு விழா, 36-ஆவது  வணிகர் தின விழா, ஆண்டு மகாசபைக் கூட்டம் மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார்.  துணைத் தலைவர்கள் ஜவகர், மகுடபதி, துணைச் செயலாளர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தியாகராஜன் வரவேற்றுப் பேசினார். கெளரவத் தலைவர் அர்ச்சுனன்,  வர்த்தகர் சங்க ஸ்தாபகர் முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரமத்தி வேலூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாண்டி பரிசுகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
வணிகர்களை கடுமையாக பாதித்துள்ள ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் அனைத்தையும் 10 சதவிகித வரிக்குள் கொண்டு வரவேண்டும். மத்திய அரசு ஒவ்வொரு  மாநிலத்தில் இருந்தும் வரி தொடர்பாக   இரண்டு வணிக பிரதிநிதிகளை ஜி.எஸ்.டி கவுன்சிலில் உறுப்பினர்களாகச் சேர்த்து ஆலோசனை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதை மகாசபைக் கூட்டம் வரவேற்கிறது. பரமத்தி வேலூர் பள்ளி சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினருக்கு இடையூறாக உள்ள வேகத் தடைகள் மற்றும் சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைச் செயலாளர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com