Enable Javscript for better performance
நாமக்கல்லில் 174 பள்ளி வாகனங்கள் ஆய்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    நாமக்கல்லில் 174 பள்ளி வாகனங்கள் ஆய்வு

    By DIN  |   Published On : 10th May 2019 09:25 AM  |   Last Updated : 10th May 2019 09:25 AM  |  அ+அ அ-  |  

    நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வியாழக்கிழமை 174 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு,  அவற்றில் மூன்று வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.
    நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், புதன்கிழமை 142 பள்ளி பேருந்துகள், வேன்கள் ஆய்வு செய்யப்பட்டன.  இதில், இருக்கைகள், அவசர வழி இல்லாதது,  படிக்கட்டுகள் சேதம் போன்றவற்றால் 8 வாகனங்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டன.இந்த நிலையில்,  வியாழக்கிழமை நாமக்கல் முதலப்பட்டியில் உள்ள செல்வம் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு, தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காகக் கொண்டு வரப்பட்டன. வடக்கு வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,  ஒவ்வொரு பேருந்திலும், பிரேக்கின் தன்மை, அவசர கால வழி உள்ளதா, மேற்கூரை, படிக்கட்டுகள், உள்தளம்,  டயர்கள், இருக்கைகள் அனைத்தும் தரமாக உள்ளனவா?  என்பதை அதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டனர். மொத்தம் 174 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில், மூன்று வாகனங்கள் மட்டும் தகுதியிழப்பு செய்யப்பட்டன.  அந்த வாகனங்களில் மீண்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர செய்து,  இம் மாத இறுதிக்குள் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.  ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர், குமாரபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பிலும், பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp