Enable Javscript for better performance
பரமத்தி வேலூரில் மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்

    பரமத்தி வேலூரில் மரவள்ளிக் கிழங்கு விலை சரிவு

    By DIN  |   Published On : 15th May 2019 08:30 AM  |   Last Updated : 15th May 2019 08:30 AM  |  அ+அ அ-  |  

    பரமத்தி வேலூர் வட்டத்தில் அறுவடை செய்த மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை சரிவடைந்துள்ளதால், மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    பரமத்தி வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி வட்டத்தில் பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    இப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
    மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ.12 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது, டன் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் வரை விலை சரிவடைந்து ரூ.11 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், சிப்ஸ் தயார் செய்வதற்காக வாங்கிச் செல்லும் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.13 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையாகி வருகிறது. விலை சரிவடைந்துள்ளதால் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp