சுடச்சுட

    

    ராஜா வாய்க்காலில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் மீட்பு

    By DIN  |   Published on : 16th May 2019 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ராஜா வாய்க்காலில் மிதந்து வந்த அடையாளம் தெரியாத  மூதாட்டியின் சடலத்தை மீட்டு ஜேடர்பாளையம் போலீஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜேடர்பாளையம்  அருகே  உள்ள  ஆனங்கூர் ராஜா வாய்க்காலில் புதன்கிழமை மாலை அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலம் மிதந்து வருவதாக ஜேடர்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில் அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீஸார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் ராஜாவாய்க்காலில் மிதந்து வந்த மூதாட்டிக்கு  சுமார் 70 வயது இருக்கலாம். சிவப்பு நிறத்தில் உள்ளாடையும், கழுத்தில் மஞ்சள் கயிறும், காதில் தங்கத்தோடுகளும் அணிந்துள்ளார்.  அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai