எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மோகனூர்  அருகே  எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மோகனூர்  அருகே  எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம்,  மோகனூர் ஒன்றியத்துக்குள்பட்ட  எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு  ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா  வெகு விமரிசையாக நடைபெறும்.  அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா  செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் கம்பம் நட்டு, காப்பு கட்டுதலுடன்  தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கம்பத்துக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ஊற்றி வழிபட்டனர்.     வரும்  20-ஆம் தேதி திங்கள்கிழமை மறுகாப்பு கட்டி,  அன்று முதல் தினசரி இரவு சுவாமி ஊர்வலம் நடைபெற உள்ளது.  26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  வடிசோறு பூஜையும், திங்கள்கிழமை அதிகாலை 3  மணிக்கு மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.  அன்று காலையில் அக்னிச் சட்டி எடுத்தும்,  அலகு குத்தியும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை 10 மணிக்கு சுவாமி  பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பிற்பகல் 2 மணியளவில்  கோயில் முன்பு அமைக்கப்படும் அக்னிக் குண்டத்தில்  தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இரவில் வாண வேடிக்கை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை பொங்கல்,   கிடா வெட்டுதல் நடைபெற்று மாலை 4 மணியளவில், 45 அடி உயரம் கொண்ட திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 
29-ஆம் தேதி (புதன்கிழமை)  மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com