கார் மோதியதில் தொழிலாளி பலி
By DIN | Published On : 20th May 2019 09:41 AM | Last Updated : 20th May 2019 09:41 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே கார் மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரைச் சேர்ந்தவர் மாறன் (55). கூலித் தொழிலாளி. இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது சைக்கிளில் கண்டிப்பாளையத்தில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆனங்கூரில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கிச் சென்ற கார் மாறன் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாறன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீஸார், மணப்பாறை அருகே உள்ள வையப்பம்பட்டியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சிவாவை (24) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.